உங்கள் பணம் உங்களுக்காக உழைக்கட்டும
மாதந்தோறும் முதலீட்டின் மூலம் ஒரு குறிப்பிட்ட தொகை வரவேண்டும் என நினைப்பவர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (Post Office Monthly Income Scheme). இதனை சுருக்கமாக எம்ஐஎஸ் (MIS) என்பார்கள்.
2011-ம் ஆண்டுக்குமுன், முதலீட்டுத் தொகையை இடையில் எடுக்காமல் ஆறு ஆண்டுகள் தொடர்ந்த வர்களுக்கு, முதலீட்டுத் தொகையில் 5% போனஸ் ஆக வழங்கப்பட்டது. இப்போது அது இல்லை.
2011 டிசம்பருக்குமுன், இது ஆறு ஆண்டு காலத் திட்டமாக இருந்தது. இப்போது ஐந்து ஆண்டு காலத் திட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
வட்டி வருமானம்
வட்டியானது மாதம் ஒரு முறை முதலீட்டாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த வட்டியை எடுத்துக்கொள்ளவில்லை என்றால் வட்டிக்கு வட்டி கிடையாது. தற்போது இந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு 7.7% வட்டி வழங்கப்படுகிறது.
குறைந்தபட்ச முதலீடு
இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு ரூ.1,500 ஆக இருக்கிறது. இதன்பிறகு இதன் மடங்குகளில் முதலீடு செய்யலாம்.
தனிநபர் ஒருவர் அதிகபட்சம் ரூ.4.5 லட்சம் முதலீடு செய்யலாம். ஜாயின்ட் அக்கவுன்ட் என்கிறபோது ரூ. 9 லட்சம் மேற்கொள்ளலாம். இரண்டு பேர் அல்லது மூன்று பேர் சேர்ந்து இந்தக் கணக்கை ஆரம்பிக்கலாம். ஒரு கணக்கில் இரண்டு பேர் சேர்ந்து, ரூ.8 லட்சம் முதலீடு செய்திருக்கிறார்கள் என்றால், இருவரின் பங்களிப்பும் சமமாக இருக்கிறது என்கிற கணக்கில்தான் எடுத்துக் கொள்ளப்படும். ஒருவரே எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால், மொத்த முதலீடு உச்ச வரம்புக்குள் இருப்பது அவசியம். மைனர் என்கிறபோது முதலீட்டு உச்ச வரம்பு ரூ.3 லட்சம் ஆகும்.

முதிர்வுக்குப் பிறகு பணத்தை எடுக்கவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தபால் அலுவலக சேமிப்புக் கணக்குக்கு வழங்கப்படும் வட்டி வழங்கப்படும். இந்த முதலீட்டின் முதிர்வுக் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
எப்படி முதலீட்டை ஆரம்பிப்பது?
அருகில் உள்ள தபால் அலுவலகத்துக்கு சென்று முதலீட்டை ஆரம்பிக்கலாம். ரொக்கம், காசோலை, கேட்புக் காசோலை என ஏதாவது ஒன்றின் மூலம் முதலீட்டை மேற்கொள்ளலாம்.
கணக்கு ஆரம்பிக்கப்பட்டதும் ஒரு சான்றிதழ் மற்றும் கணக்குப் புத்தகம் வழங்கப்படும்.
யாரெல்லாம் ஆரம்பிக்க முடியும்?
தனிநபர்கள், கணவன் - மனைவி கூட்டாக, மைனர் ஆகியோர் இந்தக் கணக்கை ஆரம்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்
1. அடையாளம் : பாஸ்போர்ட், பான் கார்டு, ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்று.
2. முகவரிக்கான ஆதாரம் : பாஸ்போர்ட், ஆதார், டெலிபோன் பில், மின்சாரக் கட்டண அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்று.
3. மைனர்கள் கணக்கு ஆரம்பிக்க வயதுக்கான ஆதாரமாக பிறப்புச் சான்றிதழ் அல்லது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தேவைப்படும். இரண்டு மார்பளவு புகைப்படங்கள் தேவைப்படும். கணக்கு ஆரம்பிக்கும்போது ஆவணங்களின் அசலைக் கொண்டு செல்வது அவசியம்.

கவனிக்கவேண்டிய விஷயங்கள்
* இந்தக் கணக்கைத் தொடங்கிய மூன்று ஆண்டுக்குள் வெளியேறினால், டெபாசிட் தொகையில் 2% அபராதமாகக் கட்டவேண்டும். மூன்று ஆண்டுகள் கழித்து வெளியேறினால், 1% அபராதம் கட்டவேண்டும். உதாரணமாக, ஒருவர் எம்ஐஎஸ்-ல் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருக்கிறார். இரண்டு ஆண்டு கழித்து அவசரத் தேவைக்காக இந்தக் கணக்கை முடிக்கும்போது அவருக்கு 98,000 ரூபாய்தான் கிடைக்கும்.
* டெபாசிட்தாரர் இடையில் இறந்துவிட்டால், நாமினி அல்லது வாரிசுதாரர்களுக்கு அந்தத் தொகை வழங்கப்படும்.
* இந்த எம்ஐஎஸ் கணக்கை ஒரு தபால் அலுவலகத்தில் இருந்து இன்னொரு தபால் அலுவலகத்துக்கு மாற்றிக்கொள்ள முடியும்.
* டிடிஎஸ் சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது.
* தனிநபர் கணக்கைக் கூட்டுக் கணக்காக மாற்றிக் கொள்ள முடியும். இதேபோல், கூட்டுக் கணக்கை தனிக் கணக்காவும் மாற்றிக்கொள்ள முடியும்.
* மைனர், மேஜர் ஆனவுடன் தந்தை, தாய் அல்லது கார்டியன் பெயரில் இருக்கும் கணக்கை தன் பெயருக்கு மாற்றிக்கொள்ள முடியும்.
வருமான வரிச் சலுகை
முதலீடு மற்றும் வட்டி வருமானத்துக்கு வரிச் சலுகை எதுவும் கிடையாது. வட்டி வருமானத்தை இதர வருமானமாகக் காட்டி வரி கட்டவேண்டி வரும் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.

No comments:
Post a Comment