உங்கள் பணம் உங்களுக்காக உழைக்கட்டும்...
இந்தியர்கள் வங்கி சேமிப்புக் கணக்குக்கு அடுத்து அதிகம் பணத்தைச் சேமிக்கும் வழிகளில் மிக முக்கியமானதாக இருக்கிறது தொடர் சேமிப்பு திட்டம் என்கிற ரெக்கரிங் டெபாசிட் (ஆர்டி) இருக்கிறது.
இந்த ஆர்டி திட்டத்தில் சிறிய தொகை இருந்தால்கூட முதலீட்டை ஆரம்பித்துவிடலாம். இந்த ஆரம்ப முதலீடு, பொதுத் துறை வங்கிகளில் ரூ.100, தனியார் வங்கிகளில் ரூ.500 - 1,000 என்கிற அளவில் இருக்கும். அதிகபட்சம் எவ்வளவு தொகை வேண்டுமானலும் முதலீடு செய்துவரலாம். ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் முதலீடு செய்வதாக இந்தச் சேமிப்புத் திட்டம் இருக்கிறது. இந்தத் திட்டத்தில் ஆறு மாதம் தொடங்கி 10 ஆண்டுகள் வரை தொடரலாம்.
வட்டி எப்படி?
வட்டியானது சுமார் 5.75% தொடங்கி 7.10% வரை செல்கிறது. இந்த வட்டி, முதலீட்டுக் காலம் மற்றும் வங்கிகளைப் பொறுத்து சற்று மாறுபடக் கூடும். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தக் குடிமக்களுக்கு 0.5% கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. பல வங்கிகளில் விசாரித்து எந்த வங்கியில் கூடுதல் வட்டி கிடைக்கிறதோ, அதில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும்.
தற்போதைய நிலையில் முதலீட்டுக் காலம் அதிகரிக்க அதிகரிக்க, ஆர்டிக்கான வட்டி விகிதம் குறைந்துகொண்டே செல்கிறது. காரணம், வங்கி களுக்கு இப்போது குறுகிய காலத்தில்தான் அதிக நிதி தேவை. எனவே, குறுகிய கால முதலீட்டுக்கு அதிக வட்டியை அளித்து வருகின்றன. இப்போதுள்ள நிலையில், குறுகிய கால ஆர்டி-யைத் தேர்வு செய்வது லாபகரமாக இருக்கும்.
காலாண்டுக்கு ஒருமுறை கூட்டு வட்டி கணக் கிடப்படும். ஆனால், வட்டியானது முதிர்வின் போதுதான் தரப்படும். ஆர்டி-ல் மாதம் எவ்வளவு முதலீடு செய்கிறீர்கள், எத்தனை ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து ஆரம்பத்திலே முதிர்வுத் தொகையை சொல்லி விடுவார்கள். இடையில் தாமதமாக தவணை கட்டினால், அதற்கான வட்டியை முதிர்வின்போது பிடிப்பார்கள். எனவே, முடிந்த மட்டும் சரியான தேதியில் தொகையைக் கட்டிவிடுவது நல்லது.
யாரெல்லாம் தொடங்கலாம்?
1. 18 வயதுக்கு மேற்பட்ட தனி நபர்கள்

2. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கூட்டாக
3. பத்து வயதுக்கு மேற்பட்ட சிறார்கள் (மைனர்)
4. கூட்டு நிறுவனங்கள், சொஸைட்டி
என்ன ஆவணங்கள் தேவை?
புகைப்பட அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆதாரங்கள் தேவைப்படும்.
புகைப்பட அடையாளத்துக்கு பாஸ்போர்ட், பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், அரசு அடையாள அட்டை போன்ற வற்றின் நகல்களைக் கொடுக்கலாம்.
முகவரிக்கான ஆதாரமாக பாஸ்போர்ட், ரேஷன் டெலி போன் பில், மின்சார பில், மைனர் களுக்கு பிறந்த நாள் சான்றிதழ் அல்லது 10-ம் வகுப்பு சான்றிதழ் வயது ஆதாரத்துக்குத் தேவைப்படும்.
கணக்கை எப்படி ஆரம்பிப்பது?
ஏதாவது ஒரு வங்கிக்கு நேரில் சென்று எளிதில் ஆர்டி சேமிப்பைத் தொடங்கி விடலாம். அந்த வங்கியில் கணக்கு இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. பாஸ்போர்ட், பான் கார்டு ஜெராக்ஸ் தேவைப்படும். தொடர் சேமிப்பு கணக்கைத் தொடங்கும்போது, ஒரிஜினல் ஆவணங்களை எடுத்துச் செல்வது அவசியம்.
வங்கி சேமிப்புக் கணக்கிலிருந்து ஆர்டி கணக்கு காசோலை மூலம் மாற்றிக் கொள்ளலாம். அடுத்துவரும் மாதங்களில் வங்கிக் கணக்கிலிருந்து ஆர்டிக்கு பணம் எடுக்கப்படும். ஆர்டி கணக்கு என தனியாக பாஸ்புக் வழங்கப்படும். ஏற்கெனவே, வங்கிக் கணக்கு இருந்து, ஆன்லைன்/நெட் பேங்கிங் வசதி இருந்தால், ஆன்லைன் மூலம்கூட ஆர்டி கணக்கைத் தொடங்கிவிடலாம்.

தவணை தவறினால்..!
ஆர்டி தொடங்கியபின் இடையில் மாதத் தவணையைக் குறைக்க முடியாது. எனவே, ஒருவரால் சுலபமாகக் கட்டக்கூடிய தொகையை தான் தவணையாகத் தேர்வு செய்யவேண்டும். தொடர்ந்து ஆறு மாதம் தவணை கட்டவில்லை எனில், ஆர்டி கணக்கு தானாகவே குளோஸ் ஆகிவிடும். மாதத் தவணையை சரியான தேதியில் கட்டவில்லை எனில், அபராதம் இருக்கிறது. இந்த அபராதம் 100 ரூபாய்க்கு 1.5 ரூபாயாக இருக்கிறது. அதேபோல், முதிர்வுக்கு முன்னர் ஆர்டி-யை முடித்தால், அபராத வட்டி கட்டவேண்டி வரும். உதாரணத்துக்கு, ஒருவர் 2016 ஜனவரி 1-ம் தேதி 8% வட்டியில் ஆர்டி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்வ தாகத் திட்டம். ஆனால், சுமார் ஓராண்டு கடந்த நிலையில், ஆர்டி கணக்கை 2016 டிசம்பர் 20-ம் தேதி திடீர் பணத் தேவைக்காக முடிக்கிறார். அபராத வட்டி 1%, ஆர்டி ஓராண்டுக்கான ஆர்டி வட்டி 7% . இந்த நிலையில் (7-1%=) 6% வட்டிதான் அவரின் முதலீட்டுக்கு கிடைக்கும்.
நாமினி நியமிப்பது நல்லது!
இந்த தொடர் சேமிப்புக் கணக்கில் நாமினி நியமன வசதி இருக்கிறது. நாமினியாக யாரையும் நியமிக்கவில்லை எனில், ஆர்டி போட்டிருப்பவர் இறந்துவிட்டால், சட்டப்படியான வாரிசுகளுக்கு இந்தப் பணம் போய் சேரும். கூடியவரையில் கணக்கு ஆரம்பிக்கும்போதே நாமினியை நியமித்து, விண்ணப்பத்தில் குறிப்பிட்டுவிடுவது நல்லது.
கடன் வசதி!
வங்கி ஆர்டி முதலீட்டின் மீது கடன் வாங்க முடியும். உங்களின் ஆர்டி கணக்கில் சேர்ந்திருக்கும் தொகையில் 90% வரை கடன் பெற்றுக்கொள்ள முடியும். இந்த கடனுக்கான வட்டி, ஆர்டி வட்டியைவிட 1-2% அதிகமாக இருக்கும். இது வங்கிகளைப் பொறுத்து மாறுபடும்.

No comments:
Post a Comment