Thursday, 13 April 2017

உங்க பணம் எப்ப டபுள் ஆகும்

Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.
‘‘இன்னைக்கு 1 லட்சம் ரூபா குடுக்குறேன். ஒரு வருஷத்துக்குள்ள அது டபுள் ஆகுமா?’’ என்று கேட்பவர்கள் நம்மில் ஏராளம். ‘‘நிச்சயம் ஆகும்’’ என்று பணத்தை வாங்கி, பட்டை நாமம் போட்டுவிட்டு, ஓடுகிறவர்களும் நம்மூரில் ஏராளம். உண்மையில், உங்கள் பணம் எப்போது டபுள் அல்லது டிரிப்பிள் ஆகும்?
 
உங்கள் பணம் எப்போது, அதாவது எத்தனை ஆண்டுகள் கழித்து டபுள் ஆகும் என்பதைக் கண்டுபிடிக்க சிம்பிளான ஒரு பார்முலா உண்டு. உங்கள் பணத்துக்கு எத்தனை சதவிகிதம் வருமானம் கிடைக்கும் என்பதைக் கணக்கிட்டு அதை 72 என்கிற எண்ணால் வகுத்தால், உங்கள் கேள்விக்கான பதில் கிடைத்துவிடும். 
 
உதாரணமாக, உங்கள் பணத்துக்கு 5% வருமானம் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். 72-யை 5-ஆல் வகுத்தால் உங்களுக்கான விடை கிடைக்கும். அதாவது, உங்கள் பணம் இரண்டு மடங்காகப் பெருக 14.40 ஆண்டுகள் எடுக்கும்.
 
உங்கள் முதலீட்டுக்கு 1% வருமானம் கிடைத்தால், உங்கள் பணம் இரண்டு மடங்காகப் பெருக, 72 ஆண்டுகள் ஆகும்.
 
2% வருமானம் கிடைத்தால், 36 ஆண்டுகளாகும்.
3% வருமானம் கிடைத்தால், 24 ஆண்டுகளாகும்.
4% வருமானம் கிடைத்தால், 18 ஆண்டுகளாகும்.
5% வருமானம் கிடைத்தால், 14.40 ஆண்டுகளாகும்.
6% வருமானம் கிடைத்தால், 12 ஆண்டுகளாகும்.
7% வருமானம் கிடைத்தால், 10.29 ஆண்டுகளாகும்.
8% வருமானம் கிடைத்தால், 9 ஆண்டுகளாகும்.
9% வருமானம் கிடைத்தால், 8 ஆண்டுகளாகும்.
10% வருமானம் கிடைத்தால், 7.20 ஆண்டுகளாகும்.
11% வருமானம் கிடைத்தால், 6.55 ஆண்டுகளாகும்.
12% வருமானம் கிடைத்தால், 6 ஆண்டுகளாகும்.
13% வருமானம் கிடைத்தல், 5.54 ஆண்டுகளாகும்.
14% வருமானம் கிடைத்தால், 5.14 ஆண்டுகளாகும்.
15% வருமானம் கிடைத்தால், 4.80 ஆண்டுகளாகும்.
16% வருமானம் கிடைத்தால், 4.50 ஆண்டுகளாகும்.
17% வருமானம் கிடைத்தால், 4.24 ஆண்டுகளாகும்.
18% வருமானம் கிடைத்தால், 4 ஆண்டுகளாகும்.
19% வருமானம் கிடைத்தால், 3.79 ஆண்டுகளாகும்.
20% வருமானம் கிடைத்தால், 3.60 ஆண்டுகளாகும்.
 
ஆக, உங்கள் பணம் நான்கு ஆண்டு காலத்துக்குள் இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும் என்றால், குறைந்தபட்சம் 18 முதல் 20% வரை வருமானம் கிடைப்பதாக இருக்க வேண்டும்.
 
சரி, எத்தனை ஆண்டுகளுக்கும் நம் பணம் டபுள் ஆகும் என்பதைத் தெரிந்துகொண்டுவிட்டோம். இனி, எதில் முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று பார்ப்போமா?
 
சிலர், தங்கத்தில் நிறைய வருமானம் கிடைக்கும் என்பார்கள். சிலர், ரியல் எஸ்டேட்டில் நல்ல லாபம் கிடைக்கும் என்பார்கள். இன்னும் சிலர், எஃப்.டி.யில் என்பார்கள். இன்னும் சிலருக்கு மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை என்பார்கள். 
 
இதில் எஃப்.டி.யைத் தவிர (குறுகிய காலத்துக்கு மட்டும்), எல்லா முதலீடுகள் மூலமும் கிடைக்கும் எல்லா வருமானமும் ஏற்ற, இறக்கத்துக்கு உட்பட்டதே. இவ்வளவு வருமானம் நிச்சயம் கிடைக்கும் என்று சொல்லவே முடியாது. அப்படி யாராவது சொன்னால், அதை நம்பாமல் இருப்பது நமக்கு யாரும் நாமம் போடாமல் இருக்க உதவும்.
 
நமக்கு எவ்வளவு வருமானம் வேண்டும் என்பதை நாம் எப்படி நிர்ணயித்துக் கொள்வது? சிலர், எனக்கு 20% குறையாமல் வேண்டும் என்பார்கள். இன்னும் சிலர் எனக்கு 8% வருமானம் கிடைத்தாலே போதும் என்பார். 
இரண்டு விஷயங்களை அடிப்படையாக வைத்து இந்த அளவை நாம் நிர்ணயம் செய்துகொள்ளலாம். ஒன்று, பணவீக்கம்; இரண்டாவது, நாம் எடுக்கத் துணியும் ரிஸ்க். 
 
பணவீக்கம் என்பது வேறொன்றுமல்ல, விலைவாசி உயர்வு. ஒவ்வொரு ஆண்டு ஒரு பொருளின் விலை 8% உயரும் என்றால், நம்மிடம் இருக்கும் பணத்தின் மதிப்பும் 8% உயர்ந்தால் மட்டுமே நம்மால் அந்தப் பொருளை எதிர்காலத்தில் வாங்க முடியும். தற்போது பண வீக்கம் சுமார் 8% என்கிற நிலையில், இருப்பதால், நம்முடைய வருமானமும் குறைந்தபட்சம் 8 சதவிகிதத்துக்கு மேல் கிடைக்கிற மாதிரி இருக்க வேண்டும். 
 
இரண்டாவது, ரிஸ்க். நமக்கு எவ்வளவு வருமானம் வேண்டும் என்று கேட்பதற்கு முன்பு, ஒரு முதலீட்டில் இருக்கும் ரிஸ்க் எவ்வளவு என்பதை ஆராய வேண்டும். அதாவது, அசலை இழப்பதற்கு நாம் எவ்வளவு தூரம் தயாராக இருக்கிறோம் என்பதற்கேற்ப நம் வருமானம் இருக்கும். அசலை நான் இழக்கவே விரும்பவில்லை எனில், எனக்கு எஃப்.டி., கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் சரியான முதலீடாக இருக்கும். குறுகிய காலத்தில் அசல் கொஞ்சம் இழந்தாலும் பரவாயில்லை, நீண்ட காலத்தில் 14 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் வேண்டும் என்று எதிர்பார்க்கிறவர்கள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களிலும், பங்குச் சந்தையிலும் முதலீடு செய்யலாம். 
 
உங்கள் பணத்தை டபுள் அல்லது ட்ரிபிள் எப்போது ஆகும் என்று இப்போது புரிந்ததா?
 

Wednesday, 5 April 2017

வங்கி சேமிப்புக் கணக்கைவிட அதிக லாபம் தரும் லிக்விட் ஃபண்ட்


ந்தத் தொடரில் இதுவரை பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் பற்றி தனித்தனியாகப் பார்த்தோம். இனி, நவீன முதலீட்டு உத்திகளான மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குச் சந்தை முதலீடு பற்றி பார்ப்போம். பொதுவாக, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்றாலே அது ரிஸ்க்கானது என நம்மில் பெரும்பாலானோர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மியூச்சுவல் ஃபண்டில்  பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றின் முதலீட்டுத் தன்மைக்கேற்ப ரிஸ்க் இருக்கின்றன. ரிஸ்க் இல்லாத திட்டங்களும் உள்ளன. முதலீட்டுக் காலத்துக்கேற்ற திட்டங்களும் உள்ளன.

லிக்விட் ஃபண்ட் 

ரிஸ்க் இல்லாத முதலீடான லிக்விட் ஃபண்ட் பற்றி இந்த இதழில் விரிவாகப் பார்ப்போம். 

இந்த ஃபண்டில் செய்யப்படும் முதலீடு, வங்கிச் சேமிப்புக் கணக்குக்குச் சிறந்த மாற்றாகப் பார்க்கப்படுகிறது. இந்த லிக்விட் ஃபண்டை உடனடித் திட்டம் என்றுகூட சொல்லலாம். காரணம், இதில் செய்யப்படும் முதலீட்டுத் தொகையை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். இதில் உள்ள யூனிட்களை இன்றைக்கு விற்றால் நாளைக்கு உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வந்து சேர்ந்துவிடும் வசதி இருக்கிறது. இன்னும் ஒருபடி மேலே சென்று, சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், முன்னணி வங்கிகளுடன் சேர்ந்து லிக்விட் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு ஏடிஎம் கார்டுகளைக் கொடுத்துவருகின்றன. இந்த கார்டு மூலம் ஏடிஎம்-லிருந்து எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஷாப்பிங்கூட செய்யலாம். நீங்கள் எடுக்கும் பணம் அல்லது செய்யும் செலவு, உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் கணக்கிலிருந்து கழிக்கப்படும்.  

 யாரெல்லாம் முதலீடு செய்யலாம்?

18 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் இதில் முதலீடு செய்யலாம். மைனர்கள், பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் மூலம் முதலீடு செய்யலாம். 

 என்ன ஆவணங்கள் தேவை?

புகைப்பட அடையாள ஆதாரமாக பான் கார்டு அவசியம் தேவைப்படும். முகவரி ஆதாரமாக ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் அட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்றைக் கொடுக்க வேண்டிவரும். ஆதார் இருந்தால், அதனைக் கொடுப்பது பல வகைகளில் நல்லது. இவை தவிர, வங்கி காசோலை ஒன்றும் தேவை.      

 எப்படி முதலீடு செய்வது?

இந்த லிக்விட் ஃபண்ட் திட்டத்தை அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும் கொண்டுள்ளன. அவற்றின் கிளை அலுவலகங்களில், விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்திசெய்து கொடுத்து முதலீட்டை ஆரம்பிக்கலாம். நிதி ஆலோசகர், மியூச்சுவல் ஃபண்ட் முகவர்கள் மூலமும் முதலீட்டை செய்யலாம். 

இந்த லிக்விட் ஃபண்டில் ஆரம்ப முதலீடு ரூ.5,000-ஆக இருக்கிறது. அதன்பிறகு மாதம் ரூ.1,000 தொடங்கி எவ்வளவு வேண்டுமானலும் முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு முதலீடு செய்யவேண்டியிருக்கும். அதற்கு மேல் எத்தனை ஆண்டுகளுக்கு வேண்டுமானாலும் முதலீட்டைத் தொடரலாம். 

நீங்கள் ஏற்கெனவே மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்துவருகிறீர்கள் எனில்,  உங்கள் பான் எண்ணைக் குறிப்பிட்டு உடனடியாக முதலீட்டை ஆரம்பித்துவிட முடியும். மேலும், ஆன்லைன் மூலமும் முதலீட்டைச் செய்யலாம். இந்தத் திட்டங்களில் திரட்டப்படும் நிதி  அதிகம் ரிஸ்க் இல்லாத, ஃபிக்ஸட் இன்கம் தரக்கூடிய, 

91 நாள்களுக்குள் முதிர்வுக் காலம் கொண்ட நிதி மற்றும் கடன் சார்ந்த பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். இதன் மூலம் கிடைக்கும் வருமானம், வங்கி சேமிப்புக் கணக்கு மற்றும் எஃப்டி-யைவிடக் கூடுதலாக இருக்கும். 

சிறப்பு அம்சங்கள்

லிக்விட் ஃபண்ட் திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். எப்போது வேண்டு மானாலும் அதைத் திரும்ப எடுக்க முடியும். இந்தத் திட்டத்துக்காகத் திரட்டப்படும் நிதி, நிதிச் சந்தையில் (மணி மார்க்கெட்) முதலீடு செய்யப்படுவதால், முதலீடு மீதான ரிஸ்க் இல்லை. இந்த ஃபண்டுகளில் நுழைவு மற்றும் வெளியேறும் கட்டணம் கிடையாது. 

 வருமானம் எப்படி?

இதில் முதலீடு செய்யும்  தொகையை எவ்வளவு நாள்களுக்கு  வைத்திருக்கிறீர்களோ, அதற்கேற்ப வருமானம் கிடைக்கும். பொதுவாக, ஆண்டுக்கு சுமார் 8% கிடைக்கும். (விரிவாக அட்டவணையில்)

 வருமான வரி

‘‘வங்கி சேமிப்புக் கணக்கு லாபத்துக்கு அவரவரின் அடிப்படை வருமான வரம்புக்கேற்ப வரி கட்ட வேண்டியிருக்கும்.  லிக்விட் ஃபண்டில் முதலீட்டை மூன்றாண்டுகளுக்குள் எடுத்தால், குறுகிய கால மூலதன ஆதாய வரி 30% கட்ட வேண்டி வரும். அதற்கு மேற்பட்ட காலம் வைத்திருந்து பிறகு எடுத்தால், நீண்ட கால மூலதன ஆதாய வரி 20% கட்ட வேண்டி வரும். அப்படி வரி கட்டிய பிறகும் வங்கி சேமிப்புக் கணக்கை விட லிக்விட் ஃபண்ட் முதலீடு லாபகரமாக இருக்கும்’’ என்கிறார் ஆடிட்டர்  
கே.ஆர்.சத்தியநாராயணன். அவர் மேலும் விளக்கிச் சொன்னார்.

‘‘வங்கி சேமிப்புக் கணக்குக்கு ஆண்டுக்கு 4% வட்டி தரப்படுகிறது. வங்கி சேமிப்புக் கணக்கு மூலம் கிடைக்கும் வட்டியில் ரூ.10,000 வரைக்கும் நிதியாண்டில் ஒருவர் வருமான வரி கட்ட வேண்டியதில்லை. இந்த ரூ.10,000 வட்டி கிடைக்க வேண்டுமென்றால், வங்கிக் கணக்கில் நிதியாண்டு முழுக்க ரூ.2.5 லட்சம் இருக்க வேண்டும். இந்தத் தொகையை லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்து, அதற்கு 8% வருமானம் கிடைத்தால், ரூ.20,000 கிடைக்கும். இந்த வருமானத்துக்கு 30% வருமான வரி ரூ.6,000. வங்கி சேமிப்புக் கணக்கு மூலம் கிடைக்கும் வரிச் சலுகை வருமானம் ரூ.10,000, ஆகமொத்தம் ரூ.16,000 கழித்தால்கூட ரூ.4,000 கூடுதல் லாபமாக இருக்கும்

Tuesday, 4 April 2017

 குறைந்த விலை ஸ்மார்ட்ஃபோன்

இந்தியாவில் தனது விலை குறைந்த மாடலான ரெட்மி 4A-வின் விற்பனையை அதிகாரபூர்வமாகத் துவக்குகிறது ஜியோமி. ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் ரெட்மி 3S மாடலுக்கும் கீழே பொசிஷன் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், பிரபல இ-காமர்ஸ் வலைதளமான அமேசானில் மட்டுமே பிரத்யேகமாகக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை, ஆறாயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் சில துவக்க நாளுக்கான சலுகைகளும் சேரும்போது, கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க ஸ்மார்ட்போனாக, ரெட்மி 4A திகழ்வதற்கான சாத்தியங்கள் அதிகம் எனலாம்!


ப்ராஸசர்: Snapdragon 425, 64-Bit Quad-Core & Adreno 308 GPU
பேட்டரி: 3120mAh, 7-Day Standby Time 
டிஸ்பிளே: 12.7Cm, 5 இன்ச் HD
எடை: 131.5g
சாஃப்ட்வேர்: MIUI 8, Marshmallow 6.0
கேமரா: 13MP (Rear) / 5MP (Front)
கலர்: Gold, Rose Gold, Dark Grey
சிம்: Dual SIM Slot, 4G VOLTE
மெமரி: 16 GB, Expandable Upto 128GB

பூமியிலிருந்து நிலாவுக்கு லிஃப்ட்... சென்னை மாணவனின் ஐடியாவைப் பாராட்டிய நாசா

 பூமியிலிருந்து நிலாவுக்கு லிஃப்ட்... சென்னை மாணவனின் ஐடியாவைப் பாராட்டிய நாசா!




ஷாப்பிங் மால்களிலும், பெரிய அடுக்குமாடி கட்டடங்களிலும் ஒரு தளத்தில் இருந்து இன்னொரு தளத்துக்குச் செல்ல லிஃப்ட் பயன்படுத்தியிருப்போம். ஆனால் இந்த மாணவன் கொஞ்சம் வித்தியாசமாக பூமியில் இருந்து நிலவுக்கு லிஃப்ட் வைக்க ஐடியா கொடுத்துள்ளார். "இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு பாஸ்" என நீங்கள் கேட்கலாம். ஆனா இது ஒரு நல்ல ஐடியான்னு நாசா பாராட்டி இரண்டாம் பரிசு கொடுத்திருக்கு,
நாசா ஏம்ஸ் ஆராய்ச்சி நிலையம், சான் ஜோன்ஸ் ஸ்டேட் பல்கலைக்கழகம் மற்றும் நேஷனல் ஸ்பேஸ் சொசைட்டியோடு இணைந்து 12-ம் வகுப்புக்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டியை நடத்தியது. இதன் தலைப்பாக மனிதர்கள் நிலாவில் வாழத்தகுதியான சாத்தியக்கூறுகளை அமைப்பது என அறிவித்திருந்தது. 
இதில் உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள மாணவர்கள் தங்களது ஐடியாக்களை அனுப்பி வைத்து போட்டியில் கலந்து கொண்டனர். இதில் சிங்கப்பூரில் வாழும் சென்னையை பூர்வீகமாக கொண்ட சாய் கிரண் என்ற மாணவன் கொடுத்த ஐடியாவைக் கண்டு வியந்துள்ளது நாசா. 
சாய் கிரண் 2013-ம் ஆண்டில் இருந்து தனது ஐடியாவைக் கூறி வருகிறார். அவரது ஆராய்ச்சிக்கு ‘Connecting Moon, Earth and Space’ and ‘HUMEIU Space Habitats’ என்று பெயரிட்டுள்ளார். இதன் முக்கிய அம்சமே பூமியையும், நிலவையும் லிஃப்ட் போன்ற அமைப்பின் மூலம் இணைப்பது தான். இதன் முதல்கட்டமாக நிலவுக்கும், பூமிக்கும் இடையே மனித போக்குவரத்துக்குப் பாதை அமைக்க வேண்டும். அப்போதுதான் அங்கு மனிதர்கள் வாழத் தேவையான விஷயங்களை ஏற்படுத்த முடியும் என்கிறார்.
இதில் முக்கியமான விஷயம் ஈர்ப்பு விசை, இது இல்லாமல் மனிதர்கள் அங்கு இருப்பது சாத்தியமற்றது. அதற்கான விஷயங்களோடு இந்த எலிவேட்டரை தயாரிக்க வேண்டும். வெறும் நிலவுக்குச் செல்வது மட்டும் இந்த திட்டத்தின் நோக்கமல்ல, அங்கு மறு உருவாக்கம், பொழுதுபோக்கு, ஆட்சியமைப்பு, விவசாயம் ஆகியவற்றையும் ஏற்படுத்த வேண்டும். ராக்கெட் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அணுப்புவது அதிக செலவு எடுக்கும் விஷயம். இன்னமும் இந்த லிஃப்ட் போன்ற அமைப்பு பொருளாதார ரீதியாக தற்போதைக்கு சாத்தியமற்றது என்றாலும், பிற்காலத்தில் இது சாத்தியமாகலாம். மொத்தமாக 3.8 லட்சம் கிலோ மிட்டர் தொலைவு கொண்ட இந்த திட்டத்தை பூமியிலிருந்து நிலவுக்கு அல்லது நிலவிலிருந்து பூமிக்கு என்ற அடிப்படையில் செய்யலாம் என்ற திட்ட வடிவத்தை சமர்பித்தார் சாய் கிரண்.
மேலும் உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் வந்த திட்டங்களில் சாய் கிரண் சமர்பித்த திட்டத்தில் மனித வாழ்வாதாரங்கள், தொழில்நுட்ப ரீதியான மேம்பாடுகள் மட்டுமின்றி மனித வாழ்வியல் சார்ந்த விஷயங்களுக்கும் இடம் அளித்திருந்தார். இதுதான் மற்ற திட்டங்களில் இருந்து அவரது திட்டத்தை தனித்துக் காட்டியுள்ளது. சென்ற மார்ச் மாதத்திலிருந்து சென்னையில் குடியேறி இந்த ஆராய்ச்சியைத் தொடர்கிறார் சாய் கிரண். ஏற்கெனவே இந்திய விண்வெளித்துறையை கண்டு வியக்கும் நாசா. தற்போது தமிழனின் திட்டத்தைக் கண்டு வியந்துள்ளது. 
இந்த திட்டத்தைக் கண்டு வியந்த நாசா இவருக்கு இரண்டாவது பரிசளித்து கெளரவித்துள்ளது. ஒருவேளை இந்த திட்டம் நடைமுறை படுத்தப்பட்டால் உண்மையாலுமே ஹனிமூனுக்கு மூனுக்கே செல்லலாம். நிலவிலிருந்து விளைவிக்கப்பட்ட பழங்கள் என்று கூட விற்பனை செய்யப்படலாம்... இவையெல்லாம் நடக்கும்போது இதற்கு அடித்தளமிட்டது ஒரு தமிழன் என்று உலகம் வியந்து பேசும்...

படிக்க வசதியின்றி தவிக்கும் பெண் பிள்ளைகளுக்கு

KPR Mills Ltd, Avinasi, Coimbatore


கோவை அவினாசி அருகில் உள்ள ஒரு தனியார் ஆலையில் எனது நண்பனின் தங்கையினை வேலைக்கு சேர்த்து விட அவர்களுடன் சென்று இருந்தேன்.
விண்ணப்பம் பூர்த்தி செய்யும் பொழுது என்ன டிகிரி படிக்க போரீங்க என அவர்கள் கேட்ட கேள்வி என்னை வியக்க வைத்தது.

பின்பு அந்த ஆலையினை பற்றி  மேலும் தெரிந்து கொள்ள கேட்ட போது எனக்கு வியப்பாக இருந்தது.
KPR மில் குழுமத்திற்கு சொந்தமான அதில் பணிக்கு பின் மாலை நேர பள்ளி, கல்லூரி நடைபெற்று வருகிறது. 12th, degree, nursing, yoga என பல்வேறு பிரிவில் பல பெண்கள் பயின்று வருகின்றனர். மேலும் பணியாளர்கள் பணி புரியும் அனைத்து இடங்களிலும் A/C வசதி, 2 ஆம் தேதிக்குள் Rs.6000/- சம்பளம் (ESI, PF பிடித்தம் போக கையில் கிடைக்கும் தொகை) ATM மூலம் வழங்கப்படுகிறது, போனஸ் Rs.6000/-, குடும்பம் முழுவதற்கும் ESI வசதி,  தனியார் கல்லூரிகளுக்கு நிகரான இலவச தங்குமிடம், மேனேஜர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் என வேறுபாடு இன்றி அனைவருக்கும் ஒரே மாதிரியான தரமான உணவு, இன்னும் பல வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இத்துணை வசதிகளையும் நேரில் கண்ட பின்பு எனக்கு தெரிந்த படிக்க வசதி இல்லாமல் வீட்டில் இருந்த 3 பெண்களை இதுவரை அனுப்பினேன். அதில் ஒரு பெண் இன்று காலை எனக்கு phone செய்து கண்ணீருடன் நன்றி கூறினார். அதனால் தான் இந்த பதிவு.
நம்மால் இத்தனை வசதிகளையும் அவர்களுக்கு செய்து கொடுக்க முடியாவிட்டாலும், அதற்கான வாய்ப்பினையாவது கொடுத்து உதவலாமே...

தொடர்புக்கு: 98652 53892..

படிக்கKPR Mills Ltd, Avinasi, Coimbatore:

கோவை அவினாசி அருகில் உள்ள ஒரு தனியார் ஆலையில் எனது நண்பனின் தங்கையினை வேலைக்கு சேர்த்து விட அவர்களுடன் சென்று இருந்தேன்.
விண்ணப்பம் பூர்த்தி செய்யும் பொழுது என்ன டிகிரி படிக்க போரீங்க என அவர்கள் கேட்ட கேள்வி என்னை வியக்க வைத்தது.

பின்பு அந்த ஆலையினை பற்றி  மேலும் தெரிந்து கொள்ள கேட்ட போது எனக்கு வியப்பாக இருந்தது.
KPR மில் குழுமத்திற்கு சொந்தமான அதில் பணிக்கு பின் மாலை நேர பள்ளி, கல்லூரி நடைபெற்று வருகிறது. 12th, degree, nursing, yoga என பல்வேறு பிரிவில் பல பெண்கள் பயின்று வருகின்றனர். மேலும் பணியாளர்கள் பணி புரியும் அனைத்து இடங்களிலும் A/C வசதி, 2 ஆம் தேதிக்குள் Rs.6000/- சம்பளம் (ESI, PF பிடித்தம் போக கையில் கிடைக்கும் தொகை) ATM மூலம் வழங்கப்படுகிறது, போனஸ் Rs.6000/-, குடும்பம் முழுவதற்கும் ESI வசதி,  தனியார் கல்லூரிகளுக்கு நிகரான இலவச தங்குமிடம், மேனேஜர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் என வேறுபாடு இன்றி அனைவருக்கும் ஒரே மாதிரியான தரமான உணவு, இன்னும் பல வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இத்துணை வசதிகளையும் நேரில் கண்ட பின்பு எனக்கு தெரிந்த படிக்க வசதி இல்லாமல் வீட்டில் இருந்த 3 பெண்களை இதுவரை அனுப்பினேன். அதில் ஒரு பெண் இன்று காலை எனக்கு phone செய்து கண்ணீருடன் நன்றி கூறினார். அதனால் தான் இந்த பதிவு.
நம்மால் இத்தனை வசதிகளையும் அவர்களுக்கு செய்து கொடுக்க முடியாவிட்டாலும், அதற்கான வாய்ப்பினையாவது கொடுத்து உதவலாமே...

தொடர்புக்கு: 98652 53892..

படிக்க வசதியின்றி தவிக்கும் பெண் பிள்ளைகளுக்கு உதவும் மனம் கொண்டவர்கள் இதனை அதிகம் பகிரவும். வசதியின்றி தவிக்கும் பெண் பிள்ளைகளுக்கு உதவும் மனம் கொண்டவர்கள் இதனை அதிகம் பகிரவும்.