Tuesday, 18 July 2017

புதிய பயிர் காப்பீடு திட்டம் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் தற்போதைய. கார் பருவத்துக்கான புதிய பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்து விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்று வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து விழுப்புரம் வேளாண்மை உதவி இயக்குனர் பிரேமலதா கூறியதாவது விவசாயிகள் விலைவிக்கும் பயிர்கள் வெள்ளம், பூச்சிநோய்தாக்குதல் போன்ற பல்வேறு இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படுகின்றன.எனவே விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதன் மூலம் தங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிசெய்ய முடியும்.
இந்தாண்டு தற்போதைய கார்பருவத்தில் இணைவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பயிர் காப்பீட்டுத் தொகை,காப்பீட்டு கட்டணம், அரசு மானியம், காப்பீட்டுக்கான கடைசி தேதி ஆகியவை அட்டவணையில் உள்ளது.

 



No comments:

Post a Comment