Monday, 21 August 2017

சிறுதுளி பெருவெள்ளம்

சிறுதுளிபெருவெள்ளம் தோன்ற காரணம்.நானும் என் நண்பரும். கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் பேசிக்கொண்டு இருந்தோம்.
அதாவது வெளிநாடு வந்து மூன்று வருடம் முடிந்தது,ஆனால் சேமிப்பு என்பது ஒன்றும் இல்லை இப்படியே போனால் தாய்நாடு திரும்பும்போது கையில் ஒன்றும் இருக்காது என்ற எண்ணம் தோன்ற அன்று உதயமானது தான் சிறுதுளி பெருவெள்ளம்.
நம்முடைய பணமும் பெருக வேண்டும்,மற்றொருவர்க்கு உதவுதாகவும் மற்றும் சேமிப்பாகவும் இருக்கக்கூடிய அமைப்பாக அமைக்க முடிவு செய்தோம்.
      பன்னிரண்டு உறுப்பினர்களுடன் 12000 திரம் (aed) மூலதனமாக வைத்துக்கொண்டோம்.சேமிப்பாக   மாதமாதம் 300 திரம் (aed) என்று முடிவு செய்தோம்.
     இன்று இதன் சொத்து மதிப்பு 12000. பத்து மாதம் முடிந்த நிலையில் இன்று சொத்து மதிப்பு 43200.
     இதை இந்திய ரூபாய் மதிப்பில் பார்த்தால் ஆரம்பம் சுமாராக இரண்டு லட்சம்,இன்று சுமாராக ஏழு லட்சம்.
நண்பர்களே நீங்களும் இது போன்று உங்களுடன் பனிபுரியும் தோழர்களுடன் ஒரு அமைப்பை உருவாக்கி சொத்து சேருங்கள்.இங்கு சொத்து என்பது உங்கள் சேமிப்பை குறிக்கிறது.      ரிச் டேட்  பூவர் டேட் புத்தகத்தில் குறிப்பிட்டதை போன்று ஒருவர் சொத்து வாங்க வாங்க அவர் வலுவான கை இருப்பு வைத்துள்ளார்.ஒருவர் கடன் வாங்க வாங்க அவர் எதிர் காலத்தில் சம்பாதித்து கடன் கட்டவே சரியாக இருக்கும். இதை தான் பணக்கார தந்தை ஏழை தந்தை என விரிவாக உள்ளது.முடிந்தால் ஒரு முறை இந்த புத்தகத்தை படிக்கவும்.
    இதை தான் பணக்கார்கள் செய்கின்றனர் இதனால் அவர்கள் பணம் அவர்களுக்காக வேலை செய்கிறது.நாம் லோன் மற்றும் இ.எம்.ஐ வாங்கி அதை அடைக்கவே ஓட வேண்டி உள்ளது இதை சரியாக பயன்படுத்தும் நபர்கள் பணம் மேன்மேலும் பெருகும்
   இந்த அமைப்பையே கடந்த மூன்று ஆண்டுக்கு முன் ஆரம்பித்து இருந்தால் அதன் தற்போதைய சொத்து எப்படியும் இருபது லட்சம்.
கொஞ்சம் சிந்தித்தால் நீங்களும் ஆகலாம் இலட்சாதிபதி.
   இவை அனைத்தும் சொந்த அனுபவமே  கற்பனை அல்ல.

BSE to 'compulsorily' delist 200 companies on Wednesday



Leading stock exchange BSE will 'compulsorily' delist 200 firms this week and bar their promoters from the markets for 10 years as trading in these shares have remained suspended for over a decade. 

All these companies will be delisted from August 23. 

The move also comes at a time when authorities are clamping down on shell companies -- listed as well as unlisted -- for allegedly being used as conduits for illicit fund flows. 

     Earlier this month, Sebi directed exchanges to act against 331 suspected shell companies, while the government has already deregistered more than 1.75 lakh firms that have not been carrying out business activities for long. 
     Majority of these companies have remained suspended for more than 10 years and are "under liquidation".


These firms will be "delisted from the platform of the exchange, with effect from August 23, 2017 pursuant to order of the delisting committee of the exchange in terms of Sebi (Delisting of Equity Shares) Regulations", BSE said in three separate circulars. 

Under the delisting regulations, the delisted company, its whole-time directors, promoters and group firm would be debarred from accessing the securities market for 10 years from the date of compulsory delisting. 

  
  Promoters of these delisted companies will be required to purchase the shares from the public shareholders as per the fair value determined by the independent valuer appointed by the BSE. 

Further, these companies will be moved to the dissemination board of the exchange for 5 years as advised by Securities and Exchange Board of India (Sebi). 

Here's the complete list of companies: 












     




காம்பவுண்ட் எஃபெக்ட் என்னும் எட்டாவது அதிசயம்!

புத்தகத்தின் பெயர்: த காம்பவுண்ட் எஃபெக்ட்
ஆசிரியர்: டாரென் ஹார்டி
பதிப்பகம்: Perseus
முயல், ஆமைக் கதையை நம்மில் பலரும் நிச்சயம் கேட்டிருப்போம். மெல்ல ஓடும் ஆமை, வேகமாக ஓடும் முயலை எப்படி வெற்றி கண்டது என்பதும் நமக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும், நாம் வெற்றி பெற்ற ஆமையாக மாறிவிடவில்லை. நாம் கொஞ்சம் வேகமாக ஓடினாலும், தோல்வி கண்ட முயலைப் போலவே இருக்கிறோம். இதற்கு என்ன காரணம்?
‘‘கூட்டு விளைவு, அதாவது, காம்பவுண்ட் எஃபெக்ட் என்பதன் மகத்துவத்தைப் புரிந்துகொள்ளாததே’’ என்கிறார் அமெரிக்காவின் பிரபல பிசினஸ்மேனும், ஊக்கம் தரும் பேச்சாளர் மற்றும் எழுத்தாளருமான டாரன் ஹார்டி. இவர் ‘The Compound Effect’ என்கிற புத்தகத்தின் ஆசிரியர். இந்தப் புத்தகத்தில் அவர் சொல்லி இருக்கிற விஷயங்ளை நீங்கள் பின்பற்றத் தொடங்கினால், வெற்றி பெற வாய்ப்புள்ள ஆமையாக நீங்கள் மாறுவது நிச்சயம்.
‘கூட்டு விளைவு’ வெற்றியைத் தரும் என்பதற்கு இந்தப் புத்தகம் எழுதிய ஆசிரியரே நல்லதொரு உதாரணம். ‘‘நான் 18 வயதில் எனது தொழிலின் மூலம் ஆறு இலக்க வருமானத்தைச் சம்பாதித்தேன். எனக்கு 20 வயதானபோது மேல்தட்டு வர்க்கத்தினர் குடியிருக்கும் பகுதியில் சொந்தமாக வீடு வாங்கிக் குடியேறினேன். 24 வயதில் எனது ஆண்டு வருமானம் மில்லியனுக்கும் அதிகமாக இருந்தது. எனது 27-வது வயதில் நான் செய்துவந்த தொழில் 50 மில்லியன் டாலருக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியது. எனக்கு இன்னும் 40 வயதுகூட ஆகவில்லை. ஆனால், நான் வாழும் வரை என் குடும்பத்துக்குத் தேவையான பணமும் சொத்தும் போதும் என்று சொல்கிற அளவுக்கு இருக்கிறது. `கூட்டு விளைவு’தான் என் வெற்றியின் `ரகசியம்’’ என்றார் இந்தப் புத்தகத்தை எழுதிய டாரன் ஹார்டி.     
கூட்டு விளைவினால் ஏற்படக்கூடிய பலனை நாம் இதுவரை உணர்வுபூர்வமாக அனுபவிக்கவில்லை. அதனால்தான்  நாம் அது பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறோம். `சிறிய, புத்திசாலித்தனமான காரியங்களைத் தொடர்ந்து செய்வதன் மூலம் மிகப் பெரிய பலனை அடைவது’தான் கூட்டு விளைவின் மூலம் கிடைக்கும் நன்மை. ‘இந்த சின்ன விஷயம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிடப் போகிறது’ எனப் பல விஷயங்களை நாம் தொடர்ந்து செய்யாமல் விட்டுவிடுவோம். ஆனால், அந்த சின்ன விஷயங்களைத் தொடர்ந்து செய்வதன் மூலம் ஏற்படும் விளைவு, நாம் திகைத்து நிற்கிற அளவுக்கு மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்துவதாக இருக்கும்.  
உங்கள் ஆரோக்கியத்தை, உறவை, நிதி நிலையை அல்லது எந்த ஒன்றையும் மேம்படுத்த நீங்கள் மேற்கொள்ளும் மாற்றம் மிகச் சிறிதாக, கண்ணுக்குப் புலப்படாத வகையில் இருக்கும். இந்த சிறிய மாற்றங்கள் குறைவான அல்லது எந்தவொரு விளைவையும் உடனடியாக ஏற்படுத்தாது. அதனாலேயே நாம் அதைத் தொடர்ந்து செய்யாமல் விட்டுவிடுகிறோம். 
உதாரணமாக, உடம்பு இளைக்க வேண்டுமென ஓடுபவர்கள் எட்டு நாள் ஓடியபின், நாம் இன்னும் இளைக்கவில்லையே என்று நினைத்து ஓடுவதை நிறுத்திவிடுகிறார்கள். ஆறு மாதப் பயிற்சிக்குப் பின்பும் பியானோ வாசிப்பதில் நமக்கு ‘தேர்ச்சி’ வரவில்லையே என்று நினைத்து பயிற்சி செய்வதை விட்டுவிடுகிறார்கள். சில மாதங்களில் கொஞ்சம் பணத்தைச் சேமித்தபின், நிறைய பணம் சேரவில்லையே என்று நினைத்து, சேமித்த பணத்தையும் எடுத்து வேறு ஏதாவது ஒன்றுக்குச் செலவு செய்துவிடுகிறார்கள். ஆனால், சின்ன விஷயமாக இருந்தாலும், அதைத் தொடர்ந்து செய்தால் நாளடைவில் அது ஒரு பெரிய மாறுதலை ஏற்படுத்தும். 
‘காம்பவுண்ட் எஃபெக்ட்’ மூலம் கிடைக்கும் நன்மையை ஒரு உதாரணம்  மூலம் அருமையாக எடுத்துச் சொல்கிறார் ஆசிரியர் டாரன். லாரி, ஸ்காட் மற்றும் ப்ராட் (Brad) என மூன்று நண்பர்கள். இந்த மூவரும் ஒன்றாகவே வளர்ந்தவர்கள். அருகருகிலேயே வசித்து வந்தார்கள். ஒவ்வொருவரும் வருடத்துக்கு 50,000 டாலர் சம்பாதிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆனது. அவர்கள் அனைவரும் சுமாரான ஆரோக்கியத்துடனும், உடல் எடையுடனும் இருந்தார்கள். 
லாரி மகிழ்ச்சியாக இருப்பான் அல்லது மகிழ்ச்சியாக இருப்பதாக நினைத்துக் கொள்வான். இருந்தாலும், எதுவும் மாறவில்லை என அவ்வப்போது சலித்துக் கொள்வான். 
ஸ்காட், நாளொன்று நல்லதொரு புத்தகத்தில் இருந்து 10 பக்கங்கள் படிப்பதையும், வேலைக்குச் செல்லும்போது தனக்கு வழிகாட்டியாக அல்லது உத்வேகம் தரக்கூடியதாக இருக்கும் விஷயங் களையும் 30 நிமிடங்கள் கேட்கவும் ஆரம்பித்தான். தனது ஒவ்வொரு நாள் உணவிலும் 125 கலோரி அளவுக்குக் குறைக்க முடிவெடுத்தான். அத்துடன் தினமும் 2,000  அடிகள் (ஒரு மைல் தூரத்துக்கும் குறைவானது) நடக்க ஆரம்பித்தான். இது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்றாலும், இதைத் தொடர்ந்து செய்தான் ஸ்டாக்.

 ப்ராட், தனக்குத் தெரிந்து சில காரியங்களைச் செய்ய ஆரம்பித்தான். தனக்கு விருப்பமான நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்காக பெரிய திரை கொண்ட தொலைக்காட்சி ஒன்றை வாங்கினான். சமையல் தொடர்பான சானலில் பார்த்த உணவு வகைகளைச் செய்து பார்த்தான். அத்துடன்,  வீட்டிலேயே பார் ஒன்றையும் வைத்து, வாரம் ஒருமுறை மது அருந்தினான். ஆக, வாழ்க்கையில் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினான். 
சில மாதங்களுக்குப்பிறகு, இந்த மூன்று நண்பர்களுக்கு என்ன நடந்தது தெரியுமா?
ஐந்தாவது மாத முடிவில், இந்த மூவரிடம் எந்த பெரிய வித்தியாசமும் இல்லை. லாரி, வழக்கம்போல தனது வேலைகளைச் செய்து கொண்டிருந்தான். ஸ்காட் ஒவ்வொரு நாள் இரவும் தொடர்ந்து படித்துக் கொண்டும், வேலைக்குச் செல்லும்போது உத்வேகம் தரக்கூடிய ஆடியோவை 30 நிமிடங்கள் கேட்டுக் கொண்டும் இருந்தான். ப்ராட் குறைவாக வேலை செய்துகொண்டு வாழ்க்கையை `சந்தோஷமாக’ அனுபவித்து வந்தான்.  
பத்தாவது மாத முடிவிலும், இந்த மூவரின் வாழ்க்கையில் குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்த மாற்றமும் நடந்துவிடவில்லை. ஆனால், 25-வது மாத வாக்கில் இந்த மூவரின் வாழ்க்கையில் குறிப்பிட்டுச் சொல்கிற அளவுக்கு வித்தியாசங்கள் தெரிய ஆரம்பித்தன. 31-வது மாதத்தில் வித்தியாசம் மிகவும் திடுக்கிட வைக்கும் அளவுக்குத் தெரிய ஆரம்பித்தது. 
ப்ராட் இப்போது குண்டாக மாறியிருந்தான். ஒரு நாளைக்கு 125 கலோரிகள் அதிகமாக சாப்பிட்டு, சுமார் 33.5 பவுண்ட் எடை கூடி யிருந்தான். இருந்தாலும், அவனுடைய வேலையில் அவன் மகிழ்ச்சி அடையவில்லை. எனவே, அவனது திருமண வாழ்க்கை பெரும் போராட்டமாக மாறியது.  
லாரி, இரண்டரை வருடத்துக்கு முன்பு எப்படி இருந்தானோ, அதே மாதிரி இருந்தான். அவனது  மனச்சலிப்பு கொஞ்சம் அதிகரித்திருந்தது. 
ஆனால், ஸ்காட் நன்கு உடல் மெலிந்து ட்ரிம்மாக மாறியிருந்தான். ஒவ்வொரு நாளும் 125 கலோரிகளைக் குறைத்துச் சாப்பிட்டதன் மூலம் 31 மாதத்தில் சுமார் 33 பவுண்ட் எடை குறைந்திருந்தான். அது மட்டு மல்ல, இந்த 31 மாதங்களில் ஸ்காட் படிக்கவும், சுய முன்னேற்றப் பேச்சுக்களைக் கேட்கவும் ஏறக்குறைய ஆயிரம் மணி நேரம் செலவிட்டிருந்தான். புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டு நடைமுறைப் படுத்தியதால், அவனுக்குப் பதவி உயர்வும், அதிக சம்பளமும் கிடைத்தது. இவற்றையெல்லாம்விட முக்கியம், அவனுடைய திருமண வாழ்க்கை அமோகமாக இருந்தது.  
சின்னச் சின்ன விஷயங்களைத் தொடர்ந்து செய்வதன் மூலம் மிகப் பெரிய நன்மைகளைப் பெற முடியும் என்பதுதான் இந்த மூன்று பேரின் வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். 
நம் வாழ்க்கையில் எந்தவொரு விஷயத்தையும் ‘ஒரே இரவில்’ அடைந்துவிட முடியாது. அதற்காக, அந்த விஷயத்தை நம்மால் அடையவே முடியாது என்று நினைக்கக்கூடாது. எறும்பும் ஊர, கல்லும் தேயும் என்பது பழமொழி மட்டுமல்ல, சிறு துளி பெரு வெள்ளம் என்பதை நமக்கு உணர்த்தும் பாடம். கூட்டு விளைவின் மகத்துவத்தைப்  புரிந்துகொண்டால் `உடனடி விளைவின்’ மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியை நாம் மறுக்கத் தயாராகி விடுவோம். வெற்றி என்பது ‘ஆர்டர் தந்தவுடன்  வந்துசேரும் துரித உணவு அல்ல’ என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். அது தெரிந்தபின், நீங்கள் வெற்றி என்பது வேகமாகக் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டீர்கள். எந்தக் கஷ்டமும் படாமல் வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற முடியும் என்று நீங்கள் நம்புவதை நிறுத்துவீர்கள். 
ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யும் அரை டஜன் வேலைகள், உங்களுக்கு உடனடியாக எந்தப் பலனையும் தந்துவிடாது என்றாலும், அவற்றைத் தொடர்ந்து செய்வதன் மூலம் நீங்கள்  வாழ்க்கையின் புதிய உயரத்துக்கு செல்வீர்கள்!  

Sunday, 20 August 2017

Rich Dad Poor Dad

Rich Dad Poor Dad brings forth the importance of financial literacy, and propagates the need of taking the right financial decisions at the right time. The author proves his point by putting across the story of his own life, where he was influenced by two dads. The rich dad was the father of his best friend who was a real estate tycoon, and the poor dad, his own father who was an educator. The poor dad bought consumer goods with all his money, while the rich dad invested his money in the right places and bought assets with it. This made him richer and richer, while the poor dad remained poor throughout his life, in spite of doing a lot of hard work. This is the message that the author tries to put forward through his book that along with hard work and sincerity, you need to have the financial intelligence to invest money in the right places, as money begets more money.
Rich Dad Poor Dad is a must-read for all the people out there who want to climb up the ladder of financial security. The Tamil version of the book was published by Manjul in 2013, and is available in paperback.









  • The book stayed for 100 weeks on The New York Times paperback ‘advice’ chart.
  • It is a bestselling personal finance book, with 26 million copies sold worldwide
  • செல்வ மகள் சேமிப்பு திட்டம்

    உங்கள் பணம் உங்களுக்காக உழைக்கட்டும்...

    பால் அலுவலகங்கள் விரைவில் முழு நேர வங்கியாகச் செயல்பட இருக்கின்றன. இங்கு சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமான சேமிப்புத் திட்டங்கள் இருக்கின்றன. ஏற்கெனவே, அதிகம் பேர் சேமித்து வரும், தபால் அலுவலகத் தொடர் சேமிப்புத் (ஆர்டி) திட்டம் பற்றி கடந்த இதழ்களில் விரிவாகப் பார்த்தோம். 

    செல்வ மகள் சேமிப்புத் திட்டம் (சுகன்யா சம்ரிதி), மூத்தக் குடிமக்கள் சேமிப்புத் திட்டம், தபால் அலுவலக டேர்ம் டெபாசிட், தபால் அலுவலக மாத வருமானத் திட்டம், கிஷான் விகாஸ் பத்திரம், தேசிய சேமிப்புச் சான்றிதழ், தங்க மகன் சேமிப்புத் திட்டம், பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட் போன்ற திட்டங்கள் பற்றி பார்ப்போம். இவற்றில் சில திட்டங்களை வங்கிகளும் தந்து வருகிறது.

    இந்தத் திட்டங்களில், பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகச் சேமிக்கும் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பற்றி விரிவாகப் பார்ப்போம்.http://amzn.to/2fVQ4sQ



     பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்காக! 

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015, ஜனவரி 22-ல் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். பெண் குழந்தை களின் எதிர்காலத் தேவைகளான உயர் கல்வி, திருமணச் செலவு போன்றவற்றை பெற்றோர் சமாளிக்கும் விதமாக பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்புத் திட்டமாக இது உருவாக்கப் பட்டது.

    இந்தத் திட்டத்தின்படி, பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தபால் அலுவலகம் அல்லது வங்கியில் இந்தக் கணக்கைத் தொடங்கலாம்.
    குழந்தை பிறந்தவுடன், இந்தக் கணக்கைத் தொடங்கினால், அதிகபட்சம் 21 ஆண்டுகள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

     யார் தொடங்கலாம்? 

     பெண் குழந்தையின்  10 வயது வரை இந்தக் கணக்கினைத் தொடங்கலாம்.  அதிகத் தொகை தேவைப்படுபவர்கள் முன்கூட்டியே கணக்கை ஆரம்பிப்பது அல்லது அதிகத் தொகையை முதலீடு செய்துவருவது நல்லது. குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டபூர்வமான பாதுகாப்பாளர் இந்தக் கணக்கைத் தொடங்கி சேமித்து வரலாம்.

    10 வயது வரை பெண் குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் இந்தக் கணக்கை இயக்கிவர வேண்டும். அதன்பிறகு பெண் குழந்தைகள் இந்தக் கணக்கை இயக்கலாம். கணக்கு ஆரம்பிக்கும்போதே இதை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என்பது அவசியம். இப்படிச் செய்வதன் மூலம் பெண் குழந்தைகளுக்குச் சேமிப்புப் பற்றிய அடிப்படை விஷயங்கள் புரியவரும். இது எதிர்காலத்தில் அவர்கள் பணத்தைக் கையாள உதவியாக இருக்கும்.

     தேவையான ஆவணங்கள்!


    1. பெண் குழந்தைக்கான பிறப்புச் சான்றிதழ்

    2. இரு மார்பளவு புகைப்படங்கள்

    பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளரின் அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆதாரங்கள் கொடுக்க வேண்டும். மேலும், கணக்கை ஆரம்பிக்கும்போது இவற்றின் அசல் சான்றிதழ்களைக் காட்ட வேண்டும்.
     எங்கு தொடங்கலாம்?

    நிதி ஆலோசகர் ரமேஷ் பட் இந்தத் திட்டம் பற்றிச் சொன்னார். “உங்கள் வீட்டின் அருகில் உள்ள தபால் அலுவலகம் அல்லது வங்கிக் கிளையில் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தை தொடங்கிக் கொள்ளலாம். ஏற்கெனவே பெற்றோர் அல்லது பாதுகாப்பாளருக்கு வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் கணக்கு இருந்தால், புதிதாகத் தொடங்கத் தேவையில்லை.

    ஒரு பெண் குழந்தையின் பெயரில் ஒரு கணக்குத்தான் தொடங்க முடியும். மேலும், ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகளின்  பெயரில்தான் இந்தக் கணக்கை தொடங்கி வரிச் சலுகை பெற முடியும். இரட்டைப் பெண் குழந்தைகளாகப் பிறந்திருந்தால், அந்த இரு குழந்தைகளையும் ஒரு குழந்தையாகக் கணக்கிடப்பட்டு, அந்தக் குழந்தைகள் இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

    உதாரணத்துக்கு, ஒரு தம்பதிக்கு முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தை, இரண்டாவது பிரசவத்தில் இரு பெண் குழந்தைகள் என்றால், மூன்று பெண் குழந்தைகளும் இந்த சேமிப்புத் திட்டத்தில் சேர முடியும். முதல் பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள், அதன்பிறகு பெண் குழந்தை பிறந்தாலும் இந்த சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்துகொள்ள முடியும்” என்றார்.    

     குறைந்தபட்ச முதலீடு!


    ஆரம்பத்தில் ரூ.1,000 போட்டு இந்தக் கணக்கை தொடங்க வேண்டும்.  ஒவ்வொரு நிதி ஆண்டிலும் (ஏப்ரல் முதல் மார்ச் வரை) குறைந்தபட்சமாக    ரூ.1,000 இந்தக் கணக்கில் சேமிக்க வேண்டும்.   ரூ.100-களின் மடங்குகளில் முதலீட்டுத் தொகையை அதிகரித்து வரலாம். தவணை தவறினால் ரூ.50 அபராதத்துடன் கட்ட வேண்டும்.  

     மொத்தம் 14 ஆண்டுகள் அல்லது பெண்ணுக்குத் திருமணமாகும் வரை சேமிக்க வேண்டும்.  ஒரு நிதி ஆண்டில் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் சேமிக்க வேண்டும். அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை  செலுத்தலாம். 
    வட்டி!

    செல்வ மகள் சேமிப்புத்  திட்டம் தொடங்கப் பட்டபோது, தபால் அலுவலகச் சேமிப்புத் திட்டங்களிலேயே இதற்குதான் ஆண்டுக்கு 9.6% வட்டி வழங்கப்பட்டது. இது பிறகு 9.2 சதவிகித மாகக் குறைக்கப்பட்டது. அதன்பிறகு 9.1 சதவிகித மாகக் குறைந்தது. இப்போது 8.5% வட்டி வழங்கப் படுகிறது.

    செல்வ மகள் சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி விகிதம், முந்தைய நிதி ஆண்டில் 10 ஆண்டு அரசு பாண்டு பத்திரம் கொடுத்த வருமானத்தைவிட 0.75% அதிகமாக இருக்கும்.

    தற்போதைய வட்டி விகிதத்தில் மார்ச் 31, 2017 வரைக்கும் மாற்றம் இருக்காது. அதன்பிறகு,  வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படலாம். வரும் காலங்களில் டெபாசிட் மற்றும் கடனுக்கான  வட்டி விகிதம் குறைய அதிக வாய்ப்பு இருப்பதால், இந்தச் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்திலும்  வட்டி குறைய வாய்ப்பு இருக்கிறது.

     வட்டி கணக்கிடும் முறை!

    வட்டியானது மாதம் ஒரு முறை கணக்கிடப்படும்.  குறிப்பிட்ட மாதத்தில், கணக்கில் இருந்த குறைந்தபட்சத் தொகை வட்டி கணக்கிட எடுத்துக் கொள்ளப்படும். இந்த வட்டி, ஆண்டு இறுதியில் கணக்கில் சேர்க்கப்படும்.
    பொதுவாக, இந்த பார்முலாவின் அடிப்படையில்தான் வட்டி கணக்கிடப் படும். வட்டி = (ஆரம்பக் கையிருப்பு + மாதச் சேமிப்பு) x மாத வட்டி.

     தொகை எப்போது கிடைக்கும்?

    பெண்ணுக்கு 18 வயது நிறைவடையும் போது அவரது கல்வி அல்லது திருமண செலவுக்காகக் கணக்கில் உள்ள தொகை யில் 50 சதவிகிதத்தைப் பெற்றுக் கொள்ளலாம். முதிர்வுத் தொகையை 21-ம் வயது இறுதியில் பெறலாம். இடையில் பணத்தை எடுக்க அனுமதியில்லை.

    அதே நேரத்தில், பெண்ணுக்கு 18 வயது நிறைவடைந்ததும் திருமணம் நடக்கிறது எனில், கணக்கில் இருக்கிற முழுத் தொகையையும் தந்துவிடுவார்கள். இதற்கு நீதிமன்றத்தில் உறுதிமொழி (அபிடவிட்) மற்றும் திருமணம் நடைபெறுவதற்கான ஆதாரங்களைச் சமர்பிக்க வேண்டும்.

    பத்து வயதில் கணக்கைத் தொடங்கி, ஒரு பெண்ணின் 18 வயதில் திருமணத்துக்கான தொகையை எடுக்கும்பட்சத்தில், குறைந்தபட்ச லாக்கின் பிரீயட் 8 ஆண்டுகளாக இருக்கிறது.

    முதிர்வுக்குப் பிறகும் இந்தக் கணக்கை உடனடியாக முடிக்கவில்லை எனில், தொகுப்பு நிதிக்கு வட்டி வழங்கப்படும். பெண் குழந்தைகளுக்குச் சேமிப்பை பெற்றோர் உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்தச் சலுகை வழங்கப் படுகிறது. 

    தற்போதைய நிலையில், இந்தக் கணக்கை ஆன்லைன் மூலம் தொடங்கும் வசதி இல்லை. இந்தக் கணக்கின் மீது கடன் பெறும் வசதியும் இல்லை. வாரிசு நியமிக்கும் வசதியும் இல்லை. பெண் குழந்தை இடையில் திடீர் மரணம் அடைந்தால், கணக்கில் உள்ள தொகை பெற்றோர் அல்லது காப்பாளரிடம் கொடுக்கப்படும்.

     வரிச் சலுகை!

    இந்தக் கணக்கில் ஒரு நிதி ஆண்டில் செலுத்தப்படும் தொகைக்கு வருமான வரி விலக்கு, நிபந்தனைக்கு உட்பட்டு அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை அளிக்கப்படும். 

    ஆரம்பத்தில் முதலீட்டுக்கு மட்டும் வருமான வரிச் சலுகை அளிக்கப்பட்டது. வட்டி வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும் எனச் சொல்லப்பட்டது. இப்போது முதலீடு மற்றும் முதிர்வுக்கு வரிச் சலுகை இருக்கிறது என்பதால் இது நல்ல முதலீட்டுத் திட்டம்தான்.

    ஆனால், வட்டி விகிதம் மூன்று மாதத்துக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுவதால், முதிர்வுத் தொகை எவ்வளவு கிடைக்கும் என்பதை முன்கூட்டியே உறுதியாகக் கணிக்க முடியாது. எனவே, இந்த ஒரு திட்டத்தை வைத்து மட்டும் பெண் குழந்தைகளின் எதிர்காலச் சேமிப்புக்குத் திட்டமிடுவது கொஞ்சம் கடினமான காரியமாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

    Saturday, 19 August 2017

    ஆங்கிலத்தில் அசத்தும் அரசுப் பள்ளி மாணவி!

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அரசுப் பள்ளியில் முதலாம் வகுப்பு படிக்கும் மாணவி,5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஈடாக ஆங்கிலத் திறனை வளர்த்து,முன்னுதாரணமாக திகைழ்கிறார்.
    தங்கள் பிள்ளைகள் ஆங்கில மொழித்திறன் பெற வேண்டும் என்று பெற்றோர்கள் தனியார் பள்ளியை நாடி வருகின்றனர்,ஆனால் அரசுப் பள்ளிகளிலும் திறமை வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் சிறப்பாக ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது என்பதற்க்கு உதாரணமாக விளங்குகிறார் திண்டிவனம் அருகே உள்ள கட்டளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலாம் வகுப்பு படிக்கும் மாணவி காவ்யா.
    இவர் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஈடாக ஆங்கிலம் பேசுகிறார்.இந்த பள்ளியில் முதலாம் வகுப்பு சேர்ந்து ஒரு மாதமே ஆன மாணவி காவ்யா,ஆங்கில எழுத்துக்களை அதிவேகமாக எழுதவதுடன்,உச்சரிப்பது ஆசிரியர் ஆங்கிலத்தில் கேட்கும் கேள்விக் அழகாக பதில் அளிக்கிறார்.ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் அர்த்தத்தையும் கூறுகிறார்.
    இதுதொடர்பாக அந்தப் பள்ளி ஆசிரியர் ச.சுகதேவ்,மாணவி காவ்யாவிடம் உரையாடிய விடியோ.பள்ளியின் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
      இது குறித்து,பள்ளி ஆசிரியர் கூறியதாவது:
    கடந்த ஆண்டு பள்ளி வயதை எட்டாத நிலையில் வீட்டில் தனியாக இருந்த காவ்யா,இதே பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்த தனது அக்கா பிரியதர்ஷனியுடன் பள்ளிக்கு வந்து சென்றார்.
    அப்போது மாணவர்களுக்கு பாடம் எடுப்பதை உற்று நோக்கி வந்த காவ்யாவுக்கு,மற்ற மாணவர்களைப் போல் சொல்லி கொடுத்து வீட்டுப் பாடம் எழுதிவரச் செய்தேன்.அவரும் ஆர்வத்துடன் எழுதிவந்து காண்பித்தார்.பின்னர் பொனெடிக் முறையில் ஆங்கில உச்சரிப்பையும் விரைவாககஃகற்றுக்கொண்டார்.
    இந்தாண்டு முறைப்படி முதல் வகுப்பில் சேர்ந்த காவ்யா,ஆங்கில வார்த்தைகளை உரிய உச்சரிப்புடன் சரளமாக வாசிப்பதும் எழுதுவதும் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஈடாக திறன் பெற்றிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
    அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் திறன் பெறுவது கடினம் என்ற மனப்பான்மையை இதுபோன்ற மாணவர்கள் தகர்த்து வருகின்றனர்.

    அழுத்தம் அதிகரித்தால் ஸ்மார்ட்போன் வெடிக்கும்: ரெட்மி எச்சரிக்கை

    அதிக அழுத்தத்தினால் ரெட்மி ஸ்மார்ட்போன் வெடிக்ககூடும் என சீன நிறுவனமான சியோமி தெரிவித்துள்ளது.


    சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் ஒருவரது ரெட்மீ நோட் 4 மொபைல் வெடித்தது. அந்த மொபைல் வெடித்ததற்கான காரணத்தை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
    அதில், வெளியிலிருந்து மொபைலுக்கு அதிகப்படியாட அழுத்தம் தரப்பட்டதால் மொபைல் வெடித்திருக்கலாம் என்று கூறியுள்ளது.
    மேலும், அதிகப்படியான அழுத்தம் காரணமாக பேட்டரி உள்ளேயே வளைந்து திரையும் சேதமடைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
    இதைதொடர்ந்து வாடிக்கையாளர்கள் மொபைலில் அதிக அழுத்தம் ஏற்படாத வண்ணம் வைத்துக்கொள்ளுமாறு அறிவுருத்தியுள்ளது.

    அபராதமாக 235 கோடி வசூல்




    வங்கிக் கணக்கில் குறைந்த இருப்பு தொகை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்து மட்டும் 235 கோடி ரூபாய் வரை பாரத ஸ்டேட் வங்கி அபராதம் வசூலித்திருப்பது தெரிய வந்துள்ளது.
    தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சந்திரசேகர் கவுட் என்பவர் கேட்ட கேள்விக்கு, மும்பையில் உள்ள பாரத ஸ்டேட் ‌வங்கி இந்த தகவலை அளித்துள்ளது. இதன்படி ஜூன் 30ஆம் தேதி வரை முதல் காலாண்டு வரை பாரத ஸ்டேட் வங்கி 388 கோடி வங்கி கணக்குகளில் குறைந்த இருப்பு தொகை வைத்திருந்ததாக 235 கோடி ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.