விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அரசுப் பள்ளியில் முதலாம் வகுப்பு படிக்கும் மாணவி,5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஈடாக ஆங்கிலத் திறனை வளர்த்து,முன்னுதாரணமாக திகைழ்கிறார்.
தங்கள் பிள்ளைகள் ஆங்கில மொழித்திறன் பெற வேண்டும் என்று பெற்றோர்கள் தனியார் பள்ளியை நாடி வருகின்றனர்,ஆனால் அரசுப் பள்ளிகளிலும் திறமை வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் சிறப்பாக ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது என்பதற்க்கு உதாரணமாக விளங்குகிறார் திண்டிவனம் அருகே உள்ள கட்டளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலாம் வகுப்பு படிக்கும் மாணவி காவ்யா.
இவர் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஈடாக ஆங்கிலம் பேசுகிறார்.இந்த பள்ளியில் முதலாம் வகுப்பு சேர்ந்து ஒரு மாதமே ஆன மாணவி காவ்யா,ஆங்கில எழுத்துக்களை அதிவேகமாக எழுதவதுடன்,உச்சரிப்பது ஆசிரியர் ஆங்கிலத்தில் கேட்கும் கேள்விக் அழகாக பதில் அளிக்கிறார்.ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் அர்த்தத்தையும் கூறுகிறார்.
இதுதொடர்பாக அந்தப் பள்ளி ஆசிரியர் ச.சுகதேவ்,மாணவி காவ்யாவிடம் உரையாடிய விடியோ.பள்ளியின் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து,பள்ளி ஆசிரியர் கூறியதாவது:
கடந்த ஆண்டு பள்ளி வயதை எட்டாத நிலையில் வீட்டில் தனியாக இருந்த காவ்யா,இதே பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்த தனது அக்கா பிரியதர்ஷனியுடன் பள்ளிக்கு வந்து சென்றார்.
அப்போது மாணவர்களுக்கு பாடம் எடுப்பதை உற்று நோக்கி வந்த காவ்யாவுக்கு,மற்ற மாணவர்களைப் போல் சொல்லி கொடுத்து வீட்டுப் பாடம் எழுதிவரச் செய்தேன்.அவரும் ஆர்வத்துடன் எழுதிவந்து காண்பித்தார்.பின்னர் பொனெடிக் முறையில் ஆங்கில உச்சரிப்பையும் விரைவாககஃகற்றுக்கொண்டார்.
இந்தாண்டு முறைப்படி முதல் வகுப்பில் சேர்ந்த காவ்யா,ஆங்கில வார்த்தைகளை உரிய உச்சரிப்புடன் சரளமாக வாசிப்பதும் எழுதுவதும் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஈடாக திறன் பெற்றிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் திறன் பெறுவது கடினம் என்ற மனப்பான்மையை இதுபோன்ற மாணவர்கள் தகர்த்து வருகின்றனர்.

No comments:
Post a Comment