உங்கள் பணம் உங்களுக்காக உழைக்கட்டும்...
பொன் மகன் பொது வைப்பு நிதித் திட்டம்
ஆண் குழந்தைகளின் எதிர்காலத் தேவைக்கு முதலீடு செய்ய, ‘பொன் மகன் பொது வைப்பு நிதித் திட்டம்’ தபால் அலுவலகத்தில் இருக்கிறது. இந்தத் திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு, 80சி பிரிவில், வருமானவரி விலக்கு அளிக்கப்படு கிறது. வட்டி வருமானத்துக்கும் வரிச் சலுகை அளிக்கப்படுகிறது.
10 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள், பெற்றோர்/ பாதுகாப்பாளர் உதவியுடன் இந்தத் திட்டத்தில் கணக்குத் தொடங்கலாம்; 10 வயதுக்கு மேற்பட்ட ஆண் குழந்தைகள் இந்தத் திட்டத்தில் தாங்களாகவே கணக்குத் தொடங்கலாம். இந்தத் திட்டத்தின்கீழ் கணக்குத் தொடங்க அதிகபட்ச வயது வரம்பு எதுவும் கிடையாது.
ஆண்டுக்கு, 100 ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். கணக்குத் தொடங்கிய மூன்றாம் ஆண்டிலிருந்து, கடன் வசதி இருக்கிறது. ஏழாம் ஆண்டில், 50 சதவிகிதத் தொகையைத் திரும்பப் பெறலாம். இது 15 ஆண்டு காலத் திட்டம். அதாவது, பொதுமக்கள் சேமநல நிதித் திட்டமான பிபிஎஃப்-ன் (பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட்) அம்சங்களை அப்படியே கொண்டு, இந்தத் திட்டத்துக்கு ‘பொன் மகன் பொது வைப்பு நிதித் திட்டம்’ என மத்திய அரசு பெயர் வைத்திருக்கிறது.
பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் ஆண்டுக்கு 8.5% வட்டி வழங்கும் மத்திய அரசு, பொன் மகன் பொது வைப்பு நிதித் திட்டத்தில் ஆண்டுக்கு 8 சதவிகிதமே வட்டி வழங்குவது கவனிக்கத்தக்கது.

No comments:
Post a Comment